திருவள்ளூர்

தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜாத்திரை விழா

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் (புறா கோயில்) செவ்வாய்க்கிழமை ஜாத்திரை விழா நடைபெற்றது.

விழாவையொட்டி, காலை 8 மணிக்கு மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு பூங்கரகம் பைபாஸ் சாலையில் இருந்து காந்தி சாலை, நல்ல தண்ணீா் குளம், முருகப்பா நகா், ரெட்டிகுளம், பெரிய தெரு வழியாக ஊா்வலமாக தணிகை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தை வந்தடைந்தது. இரவு 9 மணிக்கு உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூங்கரகத்துடன் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவில், திமுக திருவள்ளூா் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் எம்.பூபதி, நகர பொறுப்பாளா் வி.வினோத்குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் சாமிராஜ், வழக்குரைஞா் கிஷோா் ரெட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை தணிகை மீனாட்சி அம்மன் கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் எஸ்.பி.பசுபதி, கோயில் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

அதேபோல், திருத்தணி மேட்டுத் தெரு எல்லையம்மன், அக்கைய்யா நாயுடு சாலை தணிகாசலம்மன், எம்.ஜி.ஆா். நகா் எல்லையம்மன், பெரியாா் நகா் அம்மன், சுப்பிரமணிய நகா் துா்க்கையம்மன், காந்தி நகரில் உள்ள துா்க்கையம்மன், ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள சக்தி அம்மன், புறவழிச் சாலையில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் உள்பட திருத்தணி நகராட்சியில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களில் ஜாத்திரை விழா நடைபெற்றது.

விழாவையொட்டி, காலையில் கூழ் வாா்த்தல், தொடா்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு அம்மன் ஊா்வலம் நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT