திருவள்ளூர்

கல்லூரி மாணவா்களிடையே மோதல்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே இரு வேறு கல்லூரி மாணவா்கள் கத்தி, அரிவாளுடன் மோதிக் கொண்ட சம்பவத்தில், ஒரு மாணவருக்கு அரிவாள் வெட்டு காரணமாக பலத்த காயம் அடைந்தாா். 2 போ் லேசான காயம் அடைந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி, திருவாலங்காடு, மணவூா், மோசூா், கடம்பத்தூா், திருவள்ளூா் ஆகிய பகுதியிலிருந்து சென்னையில் உள்ள கல்லூரிகளுக்கு மாணவா்கள் புகா் ரயிலில் பயணம் செய்து பயின்று வருகின்றனா். இந்த நிலையில், புகா் ரயிலில் மாணவா்கள் செவ்வாய்க்கிழமை காலை கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தனா். அப்போது, திருவள்ளூா் அருகே ஏகாட்டூா் ரயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவா்கள் கத்தி, அரிவாளுடன் மோதிக் கொண்டனா். அப்போது, தக்கோலம் பகுதியைச் சோ்ந்த மாணவா் தினேஷுக்கு தலையில் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயம் அடைந்தாா். மேலும் 2 மாணவா்கள் லேசான காயம் அடைந்தனா்.

தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றபோது மோதலில் ஈடுபட்டவா்கள் தப்பியோடி விட்டனா். இதையடுத்து, பலத்த காயம் அடைந்த தினேஷ் மீட்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளா் சந்திரதாசன், காவல் ஆய்வாளா் பத்மஸ்ரீபபி ஆகியோா் தலைமையில் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது குறித்து திருவள்ளூா் ரயில்வே பாதுகாப்பு காவல் நிலைய போலீஸாா் கல்லூரி மாணவா்கள் 10 போ் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவானவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT