திருவள்ளூர்

அயப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு

17th Aug 2022 03:13 AM

ADVERTISEMENT

அயப்பாக்கம் ஊராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க ரூ.5.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் துரை.வீரமணி தெரிவித்தார்.
ஆவடியை அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் சுதந்திரத் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவர் துரை.வீரமணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணைத்தலைவர் ஏ.எம்.யுவராஜா அனைவரையும் வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில் அயப்பாக்கம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தருவது குறித்து பொதுமக்கள் பேசினார்.
பின்னர், ஊராட்சித் தலைவர் துரை.வீரமணி கூறியது: அயப்பாக்கம் வீட்டு வாரியக் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க ரூ.5.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
அயப்பாக்கம் முதல் தனக்கிலா முகாம் வரை, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு அறிஞர் அண்ணா பிரதான சாலை ஆகியவற்றை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அயப்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்ட காவல் நிலையம் விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்படும்.
ஊராட்சியில் பகுதியில் சிற்றுந்து வசதி செய்து தரப்படும்.
அஞ்சுகம் நகர், காயிதே மில்லத் நகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் வில்லிவாக்கம் ஒன்றியக் குழு தலைவர் பா.கிரிஜா, துணைத் தலைவர் ஞானபிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் அருண்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர் இரா.வினோத், ஊராட்சி செயலாளர் சசிகலா மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT