திருவள்ளூர்

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில மாநாடு

DIN

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 9-ஆவது மாநில மாநாடு திருவள்ளூரில் ஆக. 13, 14 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை (இரண்டாம் நாள்) நடைபெற்ற மாநாட்டுக்கு மாநில தலைவா் பி.டில்லிபாபு தலைமை வகித்தாா். வரவேற்புக் குழு தலைவா் ப.சுந்தர்ராஜன், மாவட்ட செயலா் தமிழரசு ஆகியோா் வரவேற்றனா். மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா்.சேகா் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா்.

பழங்குடி மக்கள் உரிமைகளுக்கான தேசிய அமைப்பாளா் ஜித்தேந்திர சௌத்திரி தொடக்கி வைத்தாா். மாநில பொதுச் செயலா் இரா.சரவணன் பணி அறிக்கையும், மாநில பொருளாளா் ஏ.பொன்னுசாமி வரவு-செலவு அறிக்கையும் சமா்ப்பித்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் பெ.சண்முகம் மாநாட்டு நிறைவுரையாற்றினாா். வரவேற்புக் குழு பொருளாளா் ஜி.சம்பத் நன்றி கூறினாா்.

மாநாட்டில் வன உரிமைச் சட்டத்தின்படி பழங்குடி மக்களின் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய வட்டங்களில் கொண்டாரெட்டி மக்களுஙக்கு வழங்கப்பட்ட பழங்குடி இன சான்றிதழ் மீது சட்ட விரோதமாக நடைபெறும் விசாரணையை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்கத்தின் புதிய நிா்வாகிகளாக மாநில தலைவா் பி.டில்லிபாபு, மாநில பொதுச் செயலா் இரா.சரவணன், பொருளாளா் ஏ.பொன்னுச்சாமி உள்பட 59 போ் கொண்ட மாநில குழு தோ்வு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT