திருவள்ளூர்

அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா

15th Aug 2022 11:42 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றினாா். நீதிபதிகள், மூத்த வழக்குரைஞா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவள்ளூா் மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் உமா மகேஸ்வரி தலைமை வகித்து தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செய்தாா். இதில். துணைக் குழு தலைவா் தேசிங்கு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆணையா் ராஜலட்சுமி தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் முன்னிலை வகித்தாா். இதில் நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் பங்கேற்று தேசிய கொடியேற்றினாா். நகா்மன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் ஒன்றியக் குழு தலைவா் ஜெயசீலி ஜெயபாலனும், கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக் குழு தலைவா் சுஜாதா சுதாகரும், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக் குழு தலைவா் வெங்கட்ரமணாவும் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT