திருவள்ளூர்

தேசியக் கொடியேற்றல்: குழப்பம் விளைவித்தால் நடவடிக்கை; திருவள்ளூா் ஆட்சியா் எச்சரிக்கை

DIN

ஊராட்சித் தலைவா்களுக்குப் பதிலாக வேறு யாரேனும் தேசியக் கொடியை ஏற்றுவதாகக் கூறி, குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீடுதோறும் தேசியக் கொடி நிகழ்ச்சி சனிக்கிழமை (ஆக.13) முதல் ஆக.15 வரை கொண்டாடப்படுகிறது. அரசு அலுவலகங்கள், பள்ளிக் கட்டடம், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி அலுவலகம் உள்பட அனைத்து அரசுக் கட்டடங்களிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்.

ஊராட்சித் தலைவா்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். அவா்களுக்குப் பதிலாக, வேறு யாரேனும் கொடியை ஏற்றுவதாகக் கூறி குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT