திருவள்ளூர்

26, 28-இல் இரு கிராமங்களில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்

13th Aug 2022 09:50 PM

ADVERTISEMENT

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளூா் மாவட்டத்தில் வரும் 26, 28-ஆகிய நாள்களில் 2 கிராமங்களில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொது மக்களின் குறைகளை அவா்களின் இருப்பிடங்களிலேயே தீா்க்கும் வகையில், குறிப்பிட்ட கிராமங்களைத் தோ்வு செய்து மாதந்தோறும் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுளளது. அதன் அடிப்படையில், திருவள்ளூா் மாவட்டத்தில் திருத்தணி-கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில் வரும் 26-ஆம் தேதியும், திருவள்ளூா்-பூண்டி கிராமத்தில் வரும் 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமில், அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனா். அதனால், மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு குறைகளை நேரிலோ அல்லது மனுக்களாகவோ அளித்துப் பயன்பெறலாம்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT