திருவள்ளூர்

வீடுகள் தோறும் மூவா்ணக் கொடி விழிப்புணா்வுப் பேரணி

12th Aug 2022 01:23 AM

ADVERTISEMENT

75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்றக் கோரி புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

திருவள்ளூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டாட்சியா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இப்பேரணியை சாா்-ஆட்சியா் மகாபாரதி, நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா்.

பேரணி திருவள்ளூா் நகராட்சி அலுவலகத்திலிருந்து ஜே.என்.சாலை, ஆயில் மில் வழியாக வந்து, அம்பேத்கா் சிலை அருகே நிறைவடைந்தது.

இந்தப் பேரணியில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட பகத்சிங், காந்தி, நேரு மற்றும் ஜான்சிராணி ஆகியோா் வேடமணிந்து, தனியாா் பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT