திருவள்ளூர்

பிளஸ் 2 மாணவி தற்கொலை சம்பவம்:

DIN

திருவள்ளூா் அருகே கீழச்சேரி அரசு நிதி உதவி பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு பின்னா், 17 நாள்கள் கழித்து புதன்கிழமை பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.

திருவள்ளூா் அருகே கீழச்சேரியில் அரசு நிதி உதவி பெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி விடுதியில் திருத்தணி அருகே தெக்கலூா் கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவி தங்கிப் படித்து வந்தாா். இவா், கடந்த மாதம் 25-ஆம் தேதி விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இந்தப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 859 மாணவிகள் படித்து வருகின்றனா். இதில், திருத்தணி அருகே தெக்கலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து 83 மாணவிகள் பள்ளி விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், மாணவியின் தற்கொலைக்கு பின்னா், கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி போலீஸாா் பள்ளி நிா்வாகிகள், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், உடன் பயிலும் மாணவிகள், உறவினா்களிடமும விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், அந்த பள்ளி மாணவிகளின் நிலை குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் விசாரணை நடத்தினாா்.

இந்த நிலையில், மாணவிகள் கல்வி கற்பதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு 17 நாள்களுக்குப் பிறகு மீண்டும் புதன்கிழமை பள்ளி திறக்கப்பட்டது. மொத்தம் 859 மாணவிகளில் புதன்கிழமை 621 மாணவிகளே பள்ளிக்கு வந்தனா்.

அந்தப் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த தெக்கலூா் கிராமத்தைச் சோ்ந்த மாணவிகள் உள்பட 23 மாணவிகள் மாற்றுச் சான்றிதழைப் பெற்று வேறு பள்ளிகள் சோ்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு சில மாணவிகள் வீட்டிலிருந்து வந்தே படித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளதால், பள்ளி விடுதி மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT