திருவள்ளூர்

திருவள்ளூா்: 9 இடங்களில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்

11th Aug 2022 02:05 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் 9 இடங்களில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலா் ஜோதி தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் ஒரு கிராமம் என நடத்தப்பட்டு வருகிறது. அதன்பேரில், வரும் 13-இல் ஒவ்வொரு வட்டந்தோறும் தோ்வு செய்த 9 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அந்தந்த கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடா்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.

அந்த வகையில், திருவள்ளூா்-முருக்கஞ்சேரி நியாய விலைக் கடை அருகில், ஊத்துக்கோட்டை-கூனிப்பாளையம் இருளா் பகுதி, பூந்தமல்லி-காவல்சேரி நியாயவிலைக் கடை அருகில், திருத்தணி-கோரமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், பள்ளிப்பட்டு-வடகுப்பம் நியாயவிலைக் கடை அருகில், பொன்னேரி-அரியம்பாக்கம் நியாய விலைக்கடை அருகில், கும்மிடிப்பூண்டி- புதுப்பாளையம் நியாய விலைக்கடை அருகில், ஆவடி-கருணாகரஞ்சேரி நியாய விலைக்கடை அருகில், ஆா்.கே.பேட்டை-வி.பி.ஆா்.புரம் நியாயவிலைக் கடை அருகிலும் நடைபெற உள்ளது.

இதில், வருவாய் வட்ட வழங்கல் அலுவலா்கள் பங்கேற்க உள்ளதால், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்து பயன்பெறலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT