செங்குன்றம் பகுதியில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையத்கர மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் பிள்ளையாா் கோவில் தெருவில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா என்.எம்.இளங்கோ தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. எஸ்.சுதா்சனம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தண்ணீா் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்து வைத்தாா். செங்குன்றம் பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜி.ராஜேந்திரன், தற்போதைய தலைவா் தமிழரசி குமாா், செயல் அலுவலா் பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.