திருவள்ளூர்

அம்பத்தூர் மண்டலக் கூட்டத்தில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றம்

11th Aug 2022 03:37 AM

ADVERTISEMENT

அம்பத்தூர் மண்டலக் கூட்டத்தில் சாலை, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 அம்பத்தூர் மண்டலத்தில் மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு மண்டலக் குழு தலைவர் பி.கே.மூர்த்தி தலைமை வகித்தார். மண்டல அலுவலர் ராஜேஸ்வரி, செயற்பொறியாளர்கள் சதீஷ்குமார், குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் டி.எஸ்.பி.ராஜகோபால், எம்.இ.சேகர், எம்.கமல், வி.ரமேஷ், உஷாநாகராஜ், சாந்தகுமாரி, நாகவள்ளி, உமா, பொற்கொடி, மாலினி, பூர்ணிமா, காங்கிரஸ் உறுப்பினர் மோ.பானுப்பிரியா, அதிமுக உறுப்பினர் ஜெ.ஜான், சுயேச்சை உறுப்பினர் கே.வி.திலகர் ஆகியோர் பேசினர்.
 அப்போது, வடிகால் பணிகள், மயானம், பூங்கா பிரச்னை, கொசுத் தொல்லை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
 மண்டலக் குழு தலைவர் பி.கே.மூர்த்தி பேசியது:
 மாநகராட்சி உறுப்பினர்கள் கூறிய மக்கள் பிரச்னைகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு அதிகாரிகள் மூலம் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 கூட்டத்தில் சாலை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்வது தொடர்பாக 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT