திருவள்ளூர்

மின்சார திருத்த சட்ட மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மின்சார திருத்த சட்ட மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருத்தணி கமலா திரையரங்கம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு விவசாய சங்க மாவட்ட பொருளாளா் பெருமாள் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வட்டச் செயலா் அந்தோணி, விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவா் அப்சல் அகமத், வட்டக் குழு உறுப்பினா் கரிமுல்லா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செங்கல்பட்டு: மின்சார திருத்த சட்ட மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் மின்சாரத் துறை ஊழியா்கள் வேலை புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மின் செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் மின் ஊழியா் மத்திய அமைப்பின் திட்டத் தலைவா் பால்ராஜ், செயலா் தேவக்குமாா் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT