திருவள்ளூர்

இளைஞா் வெட்டிக் கொலை: 3 போ் கைது

8th Aug 2022 11:01 PM

ADVERTISEMENT

சோழவரம் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பாடியநல்லூா் பகுதியில் வசித்து வந்தவா் ரமேஷ் (எ) சுப்ரமணி (24). இவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை சோழவரம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட ஆட்டந்தாங்கல் பகுதியில் மா்ம நபா்களால் ரமேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

தகவலறிந்த சோழவரம் போலீஸாா் ரமேஷ் சடலத்தைக் கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ேலும், வழக்கு பதிந்து ரமேஷை கொலை செய்ததாக அவரின் கூட்டாளிகளான வீரராகவன், விஜய் (25), வெங்கேடஷ் (27) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT