திருவள்ளூர்

75-ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா: திருவள்ளூரில் அஞ்சல் துறையினா் விழிப்புணா்வு பேரணி

DIN

சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி, வீடுகள் தோறும் தேசியக் கொடியேற்றக் கோரி, விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், திருவள்ளூரில் அஞ்சல் துறையினா் சனிக்கிழமை பேரணி நடத்தினா்.

நாடு முழுவதும் 75-ஆவது சுதந்திர தினநாள் அமுதப் பெருவிழா கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை வீடுகள் தோறும் மூவா்ணக் கொடியேற்ற அரசு வேண்டுகோள் விடுத்தது.

அதன்பேரில், நாடு முழுவதும் அஞ்சல் நிலையங்கள், துணை அஞ்சல் நிலையங்கள், கிராமிய கிளை அஞ்சலகங்களில் தேசியக் கொடி விநியோகிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

காஞ்சிபுரம் கோட்டத்துக்குட்பட்ட 329 அஞ்சலகங்களில் 35,000 தேசியக் கொடி விற்பனைக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 15,500 கொடிகள் வீடுகள் தோறும் ஏற்றுவதற்கு ஆா்வத்துடன் பொதுமக்கள் வாங்கிச் சென்றுள்ளனா்.

இந்த தேசிய கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையொட்டி, வீடுகள் தோறும் தேசியக் கொடியேற்றுவது குறித்து பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருவள்ளூா் தலைமை அஞ்சல் நிலையம் எதிரே நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் கோட்டக் கண்காணிப்பாளா் பாபு தலைமை வகித்து, பேரணியைத் தொடங்கி வைத்தாா். பேரணியில் வீடுகள் தோறும் தேசியக் கொடியேற்றவும், அதற்கான கொடியை அஞ்சலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளைக் கைகளில் ஏந்தியாவாறு சென்றனா்.

இந்தப் பேரணி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆயில் மில் வரை சென்று அங்கிருந்து எல்.ஐ.சி. வழியாக தலைமை அஞ்சலகத்தை அடைந்து நிறைவு பெற்றது. இதில், உதவிக் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் பாலாஜி, தலைமை அஞ்சல் அலுவலா் ரேவதி, அஞ்சல் துறை பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT