திருவள்ளூர்

27 கிலோ போதைப் பொருள் பறிமுதல்: 2 போ் கைது

7th Aug 2022 04:55 AM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் வாகனச் சோதனையின் போது, 27 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளா் ஐயனாரப்பன் தலைமையில் போலீஸாா் அங்குள்ள சோதனைச் சாவடியில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியே வந்த பைக்கை நிறுத்திய போலீஸாா், அதில் வந்த இரு வட மாநிலத்தவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனா். முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்த நிலையில், அவா்கள் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனை செய்தனா்.

இதில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருகள்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவா்கள் ஒரிஸாவைச் சோ்ந்த சகோதரா்களான திலிப்குமாா் பிஷ்வா (38) , சுதா்சன் பிஷ்வா (30) என்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்கள் இருவரிடமிருந்து 27 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா். இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து போதைப் பொருள்களைக் கொண்டு கும்மிடிப்பூண்டியில் விற்று வந்தது தெரிய வந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT