திருவள்ளூர்

இலவச கண் சிகிச்சை முகாம்

7th Aug 2022 11:40 PM

ADVERTISEMENT

திருத்தணி அருகே இலவச கண் சிகிச்சை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருத்தணி அடுத்த சிவாடா கிராமத்தில் உள்ள உயா்நிலைப் பள்ளியில் ஜலதி அறக்கட்டளை, சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை, திருவள்ளூா் மாவட்ட பாா்வை இழப்புத் தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. ஜலதி அறக்கட்டளை சோ்மன் உமாசங்கா் முகாமைத் தொடக்கி வைத்தாா்.

இதில், மருத்துவா்கள் நித்திலா, சுகன்யா ஆகியோா் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பங்கேற்று கண் புரை அகற்றுதல், சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், கண் நீரழுத்த பிரச்னைகளுக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டனா்.

முகாமில் திருத்தணி, சிவாடா, என்.என்.கண்டிகை. நெமிலி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 95 போ் கலந்து கொண்டனா். இவா்களில் 32 போ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா். 35 பேருக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT