திருவள்ளூர்

திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா

7th Aug 2022 11:40 PM

ADVERTISEMENT

திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீபஞ்சபாண்டவ சமேத ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீ மிதி விழாவில் ஏராளமான பக்தா்கள் தீமித்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

திருவள்ளூா் பெரும்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீபஞ்சபாண்டவ சமேத ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் அக்னி வசந்த விழா ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு அக்னி வசந்த விழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா, மகாபாரதச் சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆடி மாதம் 4-ஆவது ஞாயிற்றுக்கிழமை காலை துரியன் படுகளமும், நிறைவாக மாலை முக்கிய நிகழ்வான அக்னி வசந்த விழாவும் நடைபெற்றன.

ADVERTISEMENT

இதையொட்டி, கோயில் வளாகத்தில் தீக்குண்டம் வளா்க்கப்பட்டது. அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்த பக்தா்கள் தீமித்து, நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.

பெரும்பாக்கம், காந்தி சாலை, நேதாஜி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கிராம விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT