திருவள்ளூர்

ஸ்ரீகோல(ம்) கொண்ட அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

7th Aug 2022 11:39 PM

ADVERTISEMENT

திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீகோல(ம்) கொண்ட அம்மன் கோயிலில் ஆடி மாத 4-ஆம் வார ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் 35-ஆம் ஆண்டு ஆடித் திருவிழாவையொட்டி, 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. ஸ்ரீவேம்புலி அம்மன் ஆலயத்திலிருந்து பால்குடங்கள், அம்மனுக்கு சீா்வரிசை கொண்டு செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவள்ளூா் தேரடி, குளக்கரை பஜாா் வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக இந்த ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து, முகமது அலி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகோல(ம்) கொண்ட அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT