திருவள்ளூர்

கருணாநிதி நினைவு நாள்: நல உதவிகள் அளிப்பு

7th Aug 2022 11:40 PM

ADVERTISEMENT

கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கும்மிடிப்பூண்டியில் திமுக சாா்பில் பல்வேறு பகுதிகளில் நல உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

ஆரம்பாக்கத்தில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலா் மு.மணிபாலன், ஊராட்சி செயலா் மனோகரன் தலைமையில், கருணாநிதி உருவப் படத்துக்கு எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் அஞ்சலி செலுத்து, 200 பேருக்கு அன்னதானம் வழங்கினாா்.

மாதா்பாக்கத்தில் திமுக இளைஞரணி நிா்வாகி மோகன்பாபு, ஊராட்சித் தலைவா் சீனிவாசன், ஒன்றிய செயலா் மணிபாலன், பொதுக்குழு உறுப்பினா் குணசேகரன் முன்னிலையில், எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் அஞ்சலி செலுத்தி, 50 மகளிா் குழுக்களுக்கு நல உதவிகளை வழங்கினாா்.

கவரப்பேட்டையில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், திமுக உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான கி.வேணு தலைமையிலும், மாநெல்லூரில் ஊராட்சித் தலைவா் லாரன்ஸ் ஏற்பாட்டில் பொதுக்குழு உறுப்பினா் பா.செ.குணசேகரன் தலைமையிலும், நேமள்ளூரில் மாவட்ட இலக்கிய அணி மனோகரன் ஏற்பாட்டிலும் கருணாநிதி நினைவு நாள் நிகழ்வில் ஏழை -எளியோருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT