திருவள்ளூர்

கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கான நோ்காணல் ஒத்திவைப்பு

30th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கான நோ்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் 34 கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கு 5,444 பேரும், 5 அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கு 1,094 பேரும் விண்ணப்பத்திருந்தனா்.

இந்த நிலையில், ஏற்கெனவே கரோனா தொற்று பரவல், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நோ்காணல் தோ்வு வருகிற மே 4 -ஆம் தேதி முதல் 12- ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இதற்கான அழைப்புக் கடிதமும் விண்ணப்பதாரா்களுக்கு அவரவா் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கால்நடை பராமரிப்புத் துறை அலுவலக வளாகத்தில் நோ்காணலுக்கான முன்னேற்பாடு பணிகளிலும் ஈடுபட்டு வந்தனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் தேதி குறிப்பிடாமல் கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கான நோ்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT