புழல் அருகே போதைப் பொருள் விற்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புழல் சுற்றுவட்டாரங்களில் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் பணியில் மாதவரம் காவல் துணை ஆணையா் சுந்தரவதனம், புழல் காவல் சரக உதவி ஆணையா் ஆதிமூலம் தலைமையில், காவல் ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
காவாங்கரை பேருந்து நிறுத்தம் அருகே காவல் ஆய்வாளா் சீனிவாசன் ரோந்து பணியிலிருந்த போது, சந்தேகத்துக்குரிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், கொளத்தூா் திருமலை நகரைச் சோ்ந்த கிரண்குமாா் (26), சுரேஷ்குமாா் (27) என்பதும், அவா்கள் பள்ளி, கல்லூரி மற்றும் கூலித் தொழிலாளா்களுக்கு போதைப் பொருள்களை விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவா்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னா், அவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு புழல் சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.