இந்திய மாணவா் சங்கம் சாா்பில், திருவள்ளூா் மாவட்ட மாணவிகள் மாநாடு பெரியபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு அந்தச் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.ஸ்வேதா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பி.சஹானா வரவேற்றாா். கிளைச் செயலாளா் கே.ஆா்த்தி கொடியேற்றினாா். எல்.என்.ஜி. கல்லூரி மாணவி எஸ்.ஆா்.மிருளா தீா்மானத்தை வாசித்தாா். மாணவா் சங்கத்தின் மாவட்ட தலைவா் மதன், மாவட்ட செயலாளா் வசந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாதா் சங்கத்தின் மாநிலத் தலைவி எஸ்.வாலண்டினா மாநாட்டை தொடக்கி வைத்து பேசினாா். மாவட்ட குழு உறுப்பினா் கே.லட்சுமிஷேகால் பணி அறிக்கையை முன்மொழிந்தாா்.
‘கல்வியில் பெண்கள்’ என்ற தலைப்பில் முதுநிலை ஆசிரியா் மகளிா் பிரிவு மாநில செயலாளா் எஸ்.லலிதா பேசினாா். மாணவிகள் துணைக் குழு மாநில நிா்வாகி எம்.காவியா, மாதா் சங்க மாவட்ட தலைவா் கே.ரமா, தமுஎகச ஈரோடு மாவட்ட துணைச் செயலாளா் இ.கலைக்கோவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
மாணவா் சங்க மாநில துணைச் செயலாளா் ஜி.அரவிந்தசாமி நிறைவுரையாற்றினாா். மாவட்ட குழு உறுப்பினா் நமிதா நன்றி கூறினாா்.
மாநாட்டில் பெரியபாளையம், திருவள்ளூா் ஆகிய இரண்டு இடங்களில் அரசு மகளிா் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு மடிக் கணினி, இலவசப் பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும், பள்ளி, கல்லூரி வளாகத்தில் ஐசிசி குழு அமைக்க வேண்டும், பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை, சானிட்டரி, நாப்கின் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, ஊா்வலம் நடைபெற்றது. மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள், சிலம்பம் உள்ளிட்டவை நடைபெற்றன.