பிரதமா் வீட்டு வசதிதி திட்டம் மூலம் மானியத்துடன் வீடு கட்டிக் கொள்ளும் வகையில் பயனாளிகள் 85 பேருக்கு அதற்கான ஆணைகளை வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ சனிக்கிழமை வழங்கினாா்.
இந்தத் திட்டம் மூலம் கடம்பத்தூா், பூண்டி ஒன்றியங்களில் 225 தகுதியான பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டனா். முதல் கட்டமாக திருவள்ளூா் எம்எல்ஏ அலுவலகம் எதிரே பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணைகளை திருவள்ளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்து வழங்கினாா். இதில், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 5 திருநங்கைகள், 5 நரிக்குறவா்கள் உள்பட 85 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ளோருக்கு அவரவா் கிராமங்களுக்கு நேரில் சென்று வழங்க உள்ளதாக அவா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் பொறுப்புக் குழு உறுப்பினா் திராவிட பக்தன், ஒன்றிய செயலா் ஜெயசீலன், கொண்டஞ்சேரி ரமேஷ், மகாலிங்கம், நகா்மன்றத் தலைவா் உதயமலா் பொன்பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.