திருவள்ளூர்

புழல் ஏரியில் மூழ்கி 2 போ் சாவு

4th Apr 2022 11:50 PM

ADVERTISEMENT

புழல் ஏரியில் மூழ்கி 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் பகுதியில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியை பாா்ப்பதற்காக புழல், செங்குன்றம் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமானோா் வந்திருந்தனா். கடும் வெயில் பாதிப்பு காரணமாக சில ரசிகா்கள் மற்றும் விளையாட்டு வீரா்கள் புழல் ஏரியில் குளிக்கச் சென்றனா்.

இந்த நிலையில் புழல் என்.எஸ்.கே.தெருவை சோ்ந்த சாம் (21), மற்றும் விஜயராஜ் (22) ஆகிய இருவரும் ஏரியில் குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கிக் கொண்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து செங்குன்றம் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக தேடி இருவரின் சடலங்களையும் மீட்டனா். இது குறித்து செங்குன்றம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT