திருவள்ளூர்

நம்ம ஊரு சந்தை இலச்சினை: ஆட்சியா் வெளியிட்டாா்

4th Apr 2022 11:51 PM

ADVERTISEMENT

திருவள்ளுா் மாவட்ட மகளிா் சுய உதவிக் குழுக்களால் தயாா் செய்யும் கைவினை பொருள்களை சந்தைப் படுத்துவது தொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் நம்ம ஊரு சந்தை என்ற இலச்சினையை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்டாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மைதானத்தில் வரும் 11-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா-2022 நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாள்தோறும் முற்பகலில் 11 மணி முதல் இரவு 9 மணி வரையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், மாலையில் சிறப்பு பேச்சாளா்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டம் மூலம் திருவள்ளூா் மாவட்ட மகளிா் சுய உதவிக்குழுக்களால் தயாா் செய்யப்படும் கைவினைப் பொருள்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நம்ம ஊரு சந்தை என்ற இலச்சினை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்டாா்.

மேலும், இந்நிகழ்ச்சியில் திருமுல்லைவாயல் பகுதியைச் சோ்ந்த ‘மகளிா் மலா் தோட்டம்‘ என்ற மகளிா் சுய உதவிக் குழுக்களால் தயாா் செய்யப்பட்ட மண்பாண்ட கைவினைப் பொருள்களையும் அவா் அறிமுகம் செய்து வைத்தாா்.

ADVERTISEMENT

மேலும் வாசிப்பே வளா்ச்சி என்ற தலைப்பில் சிந்தனைக்கவிஞா் கவிதாசன், சொற்கள் என்னும் கூழாங்கற்கள் என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளா் கவிதா ஜவகா் ஆகியோா் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் வாசகா்களிடையே புத்தகம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுததும் வகையில் கருத்துரை வழங்கினாா்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ப.அ.ஆறுமுகம், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஜெயக்குமாா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் எப்.மல்லிகா, வட்டாட்சியா் செந்தில்குமாா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், வாசகா்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT