திருவள்ளூர்

திருத்தணியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

30th Oct 2021 02:52 PM

ADVERTISEMENT

திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. 
நகராட்சி ஆணையர் ப்ரீத்தி அனைவரையும் வரவேற்று பேசினார். அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெகத்ரட்சகன் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  பால்வளத்துறை அமைச்சர் சா. மு. நாசர் கலந்து கொண்டு பேசும்போது: ஒரு கப்பலுக்கு மாலுமி போல் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு தமிழகத்தை சீரோடும் சிறப்போடும் வழிநடத்தி செல்கிறார். 
முதல்வர்  கொடிய நோய் தொற்றிலிருந்து நம் நாட்டு மக்களை காப்பாற்றி உள்ளார். உலகத்திலேயே சிறந்த முதல்வராக திகழ்ந்து வருகிறார். கரோனா தடுப்பூசி செலுத்தியதில் தமிழகத்தில் நான்காவது மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் விளங்குகிறது என்றார் அவர்.
 இதையடுத்து தாடூர் ஊராட்சியில் வசிக்கும், 27 குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா, ஒரு நபருக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வீதம் 10 பேருக்கு அமைச்சர் வழங்கினார். 
தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து மொத்தம், 411 மனுக்கள் பெற்றப்பட்டது. நிகழ்ச்சியில், திருத்தணி ஏ.எஸ்.பி., சாய் பிரனீத், வருவாய் கோட்டாட்சியர் சத்யா, நேர்முக உதவியாளர் மதியழகன் திருத்தணி தாசில்தார் ஜெயராணி வருவாய் ஆய்வாளர் ஜெய்சங்கர், திருத்தணி நகர திமுக பொறுப்பாளர் வினோத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 முடிவில் நகராட்சி பொறியாளர் சண்முகம் நன்றி கூறினார். முன்னாதக அமைச்சர் நகராட்சி அலுவலம் முன்பு நடந்த மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார்.

Tags : Tiruttani
ADVERTISEMENT
ADVERTISEMENT