திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே புளியமரம் மீது பேருந்து மோதல்: 16 பெண்கள் உள்பட 20 பேர் காயம்

30th Oct 2021 12:57 PM

ADVERTISEMENT

திருவள்ளூர் அருகே புளியமரம் மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் 16 பெண்கள் உள்பட 20 பேர் காயம் அடைந்த சம்பவம் தொடர்பாக மணவாளநகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மணவாளநகர் காவல் நிலைய போலீஸார் தரப்பில் கூறியதாவது. திருவள்ளூர் அருகே வெள்ளாத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கேசவன்(28). இவர் தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பேருந்தின் ஓட்டுநராக உள்ளார். 

இந்த நிலையில் வழக்கம் போல் சனிக்கிழமை காலை திருவள்ளூர் அருகே  நுங்கம்பாக்கம் கிராமத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் தனியார் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சென்றாராம்.

இதையும் படிக்க- தேவர் ஜெயந்தி விழாவை அனைத்து சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: வைகோ

ADVERTISEMENT

திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் போலிவாக்கம் கிராமம் அருகே செல்லும்போது ஓட்டுநர் முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றாராம்.  அப்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே உள்ள புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 16 பெண்கள் உள்பட 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து தகவலறிந்த மணவாளநகர் காவல் நிலைய போலீஸôர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT