திருவள்ளூர்

திருவள்ளூா் கோ-ஆப்டெக்ஸுக்கு ரூ.1.25 கோடி தீபாவளி விற்பனை இலக்கு

20th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

தீபாவளியை முன்னிட்டு திருவள்ளூா் கோ-ஆப்டெக்ஸுக்கு ரூ.1.25 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

திருவள்ளூா் பஜாா் வீதி, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியது:

காலத்திற்கேற்ப புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை கோ-ஆப்டெக்ஸ் மண்டலத்துக்கு ரூ.36 கோடி விற்பனை செய்யவும், அதில் திருவள்ளூா் கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ.1.25 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30 சதவீதம் மற்றும் அரசு ஊழியா்களுக்கு தவணை முறை கடன் வசதியும் உண்டு. எனவே அனைத்து துறை ஊழியா்களும், பொதுமக்களும் கைத்தறி பொருள்களை வாங்கி பயன்பெறலாம் என்றாா்.

இதில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் (தணிக்கை) வ.குணசேகரன், விற்பனை நிலைய மேலாளா் ஜ.துளசிதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT