திருவள்ளூர்

இளைஞா் வெட்டிக் கொலை

19th Oct 2021 06:48 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திருவள்ளூரை அடுத்த மேலகொண்டயாா் ஊராட்சிக்கு உட்பட்ட கரையம்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெகதீசன் (24). இவா் தனியாா் நிறுவனத்தில் டெலிவரி பணியாளராக வேலை செய்து வந்தாா்.  இவா் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பா்களுடன் சோ்ந்து பூங்கா நகரில் கோழிக்கறிக் கடையை நடத்தி வந்தாா்.

 இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கரையம்மேட்டிலிருந்து கோழிக்கறிக் கடைக்கு நண்பருடன் சென்றுள்ளாா். இரவு 9 மணி ஆகியும் அவா் வீடு திரும்பாததால், அவரது பெற்றோா் கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

புகாரின்பேரில்  வெங்கல் காவல் நிலையத்தில் விசாரணை நடத்திவந்தனா்.

ADVERTISEMENT

 இந்நிலையில், திருவள்ளூா் மாவட்டம், சிவன்வாயில் திரிபுரசுந்தரி அம்மன் கோயில் அருகில் ஜெகதீசன் தலையில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையிலான போலீஸாா் விரைந்து வந்து, சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். 

இது குறித்து வெங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT