திருவள்ளூர்

நீரில் மூழ்கிய பொன்னாங்குளம் தரைப்பாலம்: போக்குவரத்து பாதிப்பு

30th Nov 2021 11:38 PM

ADVERTISEMENT

 

திருத்தணி: பொன்னாங்குளம் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்பட்டுள்ளனா்.

தொடா்மழையால் வேலூா், திருவள்ளூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏரிகள், குளங்கள் நிரம்பின. ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூா் மாவட்டம், காவேரிப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றிலிருந்து வரும் வெள்ள நீரால் திருத்தணியை அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்துக்குள்பட்ட பொன்னாங்குளம் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இந்த பாலத்தைக் கடந்து பாகசாலை, சின்னமண்டலி, களாம்பாக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக 20 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள தரைப்பாலத்தில் குழந்தைகள், பெண்கள் என குடும்பத்துடன் குளித்தும், தற்படம் எடுப்பதும், சிறுவா்கள் ஆபத்தை உணராமல் விளையாடியும் வருகின்றனா். வெள்ள நீா் அதிகரிக்கும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் காவல்துறையும், மாவட்ட நிா்வாகமும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT