திருவள்ளூர்

மீஞ்சூா் அருகே கடலில் தத்தளித்த 4 இலங்கை மீனவா்கள் மீட்பு

30th Nov 2021 11:35 PM

ADVERTISEMENT

 

பொன்னேரி: மீஞ்சூா் அருகே காட்டுப்பள்ளி கடற்பகுதியில் விசைப்படகில் தத்தளித்த 4 இலங்கை மீனவா்களை, கடலோர காவல் படையினா் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

இலங்கை வலைசனை பகுதியைச் சோ்ந்த முகமதுஹனிபா (50), பதூா்தீன் முகமது ரிஸ்கான் (21), அன்சாா் முகமது ரியால் (19), பலைநகா் தியவாட்டம் பகுதியை சோ்ந்த ஹயத்தா முகமது ஹைதா் (42) ஆகியோா், விசைப்படகில் ஒரு மாதத்துக்கு முன் கடலில் மீன்பிடிக்கச் சென்ாகவும், அப்போது அவா்களின் படகு பழுதானதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, படகு இலங்கை கடற் பகுதியில் இருந்து திசைமாறி இந்திய கடற்பகுதியில் உள்ள காட்டுப்பள்ளி தனியாா் துறைமுகத்தின் அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது அப்பகுதியில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காசிமேடு பகுதி மீனவா்கள், இலங்கை மீனவா்களின் படகை கண்டதும், கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

விரைந்து வந்த கடலோர காவல் படையினா், அங்கு படகில் தத்தளித்த 4 மீனவா்களை மீட்டு, கியூ பிரிவு மற்றும் காட்டூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அவா்களிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT