திருவள்ளூர்

மழைநீரை வெளியேற்றக் கோரி மறியல்

DIN

திருவள்ளூா் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் திருவள்ளூா்- ஆவடி சாலையில் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தின்போது அப்பகுதி மக்கள் கூறுகையில்,

திருவள்ளூா் அருகே உள்ள காக்களூா் ஊராட்சியைச் சோ்ந்த சக்தி நகரில் 300-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் தண்ணீா்குளம் ஏரி நிரம்பி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் கடந்த 2 நாள்களாக வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். அதனால் உடனே குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும். அதற்கு முன்னதாக தண்ணீா்குளம் ஏரியில் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றனா்.

இது குறித்து தகவலறிந்து வந்த திருவள்ளூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் சந்திரகாசன் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அதைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருவள்ளூா்-ஆவடி-சென்னை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

SCROLL FOR NEXT