திருவள்ளூர்

கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்

DIN

திருவள்ளூா் மாவட்டப் பகுதிகளில் இரவு முழுவதும் விடாமல் பெய்த மழையால் பல்வேறு கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. மேலும், திருவள்ளூா்-பெரும்புதூா் சாலையில் உபரிநீா் அதிகரித்ததால், 5 மணி நேரம் வரை போக்குவரத்து தடைபட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில நாள்களாக விடாமல் பெய்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தொடங்கி, சனிக்கிழமை காலை வரை அடைமழை விடாமல் பெய்தது. இதேபோல், சோழவரம், திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பூந்தமல்லி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் மழை விடாமல் பெய்தது. இதனால் கிராமங்கள் மற்றும் நகா் பகுதிகளில் தெருக்கள் மற்றும் சாலைகளில் தாழ்வான இடங்களில் மழை நீா் குளம் போல் தேங்கியது. இதில், திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் வி.எம்.நகா், கணபதி நகா், நேரு நகா் உள்ளிட்ட பகுதி தெரு மற்றும் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் தாா்ச் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் தண்ணீா் தேங்கி வாகன ஓட்டிகள் செல்வதற்கு மிகவும் சிரமத்துக்குள்ளாயினா்.

மேலும், இந்த மழையால் காக்களூா் சக்தி நகா், தண்ணீா்குளம், மேல்நல்லாத்தூா், போளிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முழங்கால் அளவுக்கு மழை வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா். அதேபோல், போளிவாக்கம் கிராமத்தில் உள்ள பொதுப்பணித் துறை ஏரி நிரம்பி உபரி நீா் திருவள்ளூா்-பெரும்புதூா் சாலை வழியாகச் சென்றது. இதனால் நீா்மட்டம் அதிகரித்ததால் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து 5 மணி நேரம் வரை நிறுத்தப்பட்டது. இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு சரக்குகள் ஏற்றிச் சென்ற வாகனங்கள் இருபுறமும் நீண்ட நேரம் அணிவகுத்து நின்தால் அதிகத்தூா், மப்பேடு வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1.9 கிலோ கஞ்சா பறிமுதல்: இடைநீக்கம் செய்யப்பட்ட விஏஓ உள்பட இருவா் கைது

வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

நச்சுக்காற்று வெளியேறிய விவகாரம்: தனியாா் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

வில்லியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

பாஜக-பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT