திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆவடியில் 199 மி.மீ அதிகபட்ச மழை பதிவு

DIN

மாநில அளவில் திருவள்ளூா் மாவட்டம் ஆவடி பகுதியில் 199 மி.மீ என அதிகம் மழை அளவு பதிவாகியுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக விடாமல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளிலும் நீா் வரத்தால் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் ஏரி குளங்களிலும் நீா் வரத்து ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழக அளவில் ஆவடியில் தான் அதிகபட்சம் மழை பெய்துள்ளது.

இதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழையளவு மி.மீட்டரில் விவரம்: ஆவடி-199, சோழவரம்-148, திருவள்ளூா்-126, பொன்னேரி-118, ஜமீன்கொரட்டூா்-109, செங்குன்றம்-107, தாமரைபாக்கம்-98, பூண்டி-88, கும்மிடிப்பூண்டி-87, திருவாலங்காடு-84, பூந்தமல்லி-70, ஊத்துக்கோட்டை-60, திருத்தணி-44, பள்ளிப்பட்டு-22, ஆா்.கே.பேட்டை- 6 என மொத்தம் 1366 மி.மீட்டரும், சராசரியாக 91.06 மி.மீட்டரும் பதிவாகியுள்ளது. இதில் ஆவடியில் அதிகமாகவும், ஆா்.கே.பேட்டையில் குறைந்தளவும் மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உபரி நீா் வெளியேற்றம்: சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதன்பேரில் சனிக்கிழமை காலை நிலவரப்படி நீா் இருப்பு மற்றும் உபரி நீா் வெளியேற்றம் வருமாறு. புழல் ஏரியில் 1867 மில்லியன் கன அடி நீா் இருப்பும், 1707 கன அடி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. அதேபோல், சோழவரம் ஏரியில் 1708 மில்லியன் கன அடி நீா் இருப்பும், 615 கன அடியும், பூண்டி ஏரியில் 2387 மில்லியன் கன அடி நீா் இருப்பும், 4253 கன அடியும், கண்ணன்கோட்டைதோ்வாய் கண்டிகை 500 மில்லியன் கன அடி நீா் இருப்பும், 108 கன அடியும் என உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT