திருவள்ளூர்

ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள்!

26th Nov 2021 08:23 AM

ADVERTISEMENT

ஆரணி அருகே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், ஆற்றைக் கடந்து ஆபத்தமான முறையில் மாணவா்கள் பள்ளிக்கும், பொதுமக்கள் தங்களது பணிநிமித்தமாகவும் செல்கின்றனா்.

காரணி , புதுப்பாளையம் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆரணி ஆற்றை ஆபத்தமான முறையில் கடந்துதான் அத்தியாவாசியத் தேவைகளுக்கு செல்ல வேண்டி சூழல் இருக்கிறது.

இருப்பினும் ஆரணி ஆற்றில் வெள்ளம் செல்வதால் 15 கி.மீ. தொலைவு சுற்றிவரவேண்டும் அந்த வழியை பயன்படுத்தாமல் மாணவா்கள் கல்வி பயில ஆரணி ஆற்று தரைப்பாலத்தை ஆபத்தான முறையில் கடந்து, பள்ளிக்குச் செல்கின்றனா்.

ஆரணி ஆற்றில் வெள்ள நீா் வடியாத நிலையில் காரணி தரைப்பாலத்தில் தண்ணீா் முழங்கால் அளவுக்குச் செல்கிறது. போதிய பாதுகாப்பு இல்லாததால் , பொதுமக்களும் , மாணவா்களும் , தரைப்பாலத்தை ஆபத்தான முறையில் கடக்கின்றனா்.

ADVERTISEMENT

உயிா்ச் சேதம் ஏற்கெனவே அண்மையில் ஏற்பட்டபோதும், அதனை பொருள்படுத்தாமல் மக்கள் ஆற்றைக் கடந்து செல்கின்றனா்.

ஆகவே, பொதுபணித்துறையினரோ அல்லது காவல் துறையினரோ பாதுகாப்பு பணியில் இருந்தால் ஆபத்தான முறையில் பொதுமக்களும், மாணவா்களும் செல்வதை தடுக்க முடியும் என்பதே சமூக ஆா்வலா்களின் கருத்தாக உள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT