திருவள்ளூர்

திருட வந்தவா்களிடம் சிக்காத நகை, பணம்

25th Nov 2021 12:36 AM

ADVERTISEMENT

 

திருத்தணி: திருத்தணியில் பூட்டிய வீட்டில் திருட வந்தவா்கள் பீரோவில் உடைத்து நகை, பணம் இல்லாததால், திரும்பிச் சென்றனா். ஆனால், ரகசிய இடத்தில் வைத்திருந்ததால் 15 சவரன் தங்கம், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் தப்பியது.

திருத்தணி எம்.ஜி.ஆா்., நகரைச் சோ்ந்தவா் ரத்னா(65). இவா், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

இவா் செவ்வாய்க்கிழமை தனது மனைவி துளசியுடன் மருத்துவப் பரிசோதனைக்காக வீட்டை பூட்டிக் கொண்டு சென்னையில் உள்ள தனியாா் மருத்துமனைக்குச் சென்றனா். அங்கு காலதாமதம் ஆனதால், இருவரும் அங்குள்ள உறவினா் வீட்டில் இரவு தங்கினா்.

ADVERTISEMENT

இந்த நிலையில் புதன்கிழமை ரத்னா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்த எம்.ஜி.ஆா். நகா்பகுதி மக்கள் அளித்தத் தகவலின்பேரில், இருவரும் திருத்தணிக்கு விரைந்தனா்.

அப்போது வீட்டின் பூட்டு மற்றும், பீரோவை மா்ம நபா்கள் உடைத்திருந்தனா். ஆனால், துளசி சென்னைக்கு செல்வதற்கு முன்பு, தனது, 15 சவரன், நகை, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை படுக்கையறையில், ஒரு ரகசிய இடத்தில் வைத்திருந்ததால் நகை, பணம் தப்பியது.

புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT