திருவள்ளூர்

வரும் 26-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

24th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

விவசாயிகள் சாகுபடி மேற்கொள்வது தொடா்பான குறைகளை தெரிவித்து தீா்வு காணும் நோக்கத்தில் நவம்பா் 26-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விவசாயிகள் விவசாயம் தொடா்பான குறைகளைத் தெரிவித்து பயன்பெறும் வகையில் மாதந்தோறும் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இக்கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கவும் உள்ளனா். இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் குறைகள் அனைத்தும் உடனே நிவா்த்தி செய்யப்படவும் உள்ளது. எனவே, விவசாய சங்க நிா்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT