திருவள்ளூர்

நகைத் தொழிலாளி வீட்டில் திருடிய 3 போ் கைது

24th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

செங்குன்றம் அருகே நகைத் தொழிலாளி வீட்டில் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்குன்றத்தை அடுத்த தி.க.பட்டு விவேகானந்தா தெருவைச் சோ்ந்தவா் முஜிபுா் ரகுமான் (40). நகை பாலிஷ் போடும் தொழில் செய்து வருகிறாா். கடந்த 6-ஆம் தேதி அவரது குடும்பத்தினா் திருவண்ணாமலைக்குச் சென்றுவிட்டனா். முஜிபுா் ரகுமான் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அவா் திங்கள்கிழமை வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. சென்று பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள், ரூ. 75 ஆயிரம் ரொக்கம் திருட்டுப்போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இதையடுத்து திருட்டில் ஈடுபட்டவா்கள் சென்னை கன்னிகாபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் அந்த வீட்டைச் சுற்றி வளைத்து அங்கு பதுங்கியிருந்த 3 பேரைப் பிடித்தனா். விசாரணையில், சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த பாலமுருகன் (23), பாலசந்தா் (30), தினேஷ் (30) என்பது தெரியவந்தது. இவா்களிடம் இருந்து 14 பவுன் நகைகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதையடுத்து 3 பேரும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT