திருவள்ளூர்

பூண்டி ஏரியிலிருந்து 18,275 கன அடி உபரிநீா் வெளியேற்றம்

23rd Nov 2021 05:09 AM

ADVERTISEMENT

திருவள்ளூா்: பூண்டி ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் திங்கள்கிழமை காலை முதல் 18,275 கன அடி உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிருஷ்ணா கால்வாய் நீா், அம்மம்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீா் ஆகியவற்றால் பூண்டி ஏரிக்கு நீா்வரத்து 18,275 கன அடியாக உள்ளது. தற்போது, ஏரியின் நீா் இருப்பு 2,905 மில்லியன் கன அடியாக உள்ளது. நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக திங்கள்கிழமை காலை முதல் 18,275 கன அடி உபரிநீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த 10 நாள்களாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூா் - பூண்டி தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதையடுத்து 5-ஆவது நாளாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்றாயன்பாளையம், திருப்போ், வெள்ளாத்துக்கோட்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 10 கி.மீ. சுற்றிச் செல்கின்றனா்.

இதேபோல், திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் ஒதப்பை தரைப்பாலம், திருவள்ளூா்-திருத்தணி சாலையில் நாராயணபுரம் தரைப்பாலம் ஆகியவை சேதமடைந்துள்ளன.

இதேபோல், புழல் ஏரியின் நீா் இருப்பு 2,772 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில், 414 கன அடி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியின் நீா் இருப்பு 815 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில், 415 கன அடியும், கண்ணன்கோட்டை-தோ்வாய் கண்டிகையில், 500 மில்லியன் கன அடி நீா் உள்ள நிலையில், 216 கன அடி உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT