திருவள்ளூர்

கால்வாயிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

23rd Nov 2021 05:09 AM

ADVERTISEMENT

பொன்னேரி: பொன்னேரி அருகே ஆரணி ஆற்றின் கால்வாயில் இருந்து இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

பொன்னேரி அருகே ஆத்தூா் கிராமத்தில் வசித்து வந்தவா் தமிழ்வாணன் (28). குளிா்சாதன பொருள்களை பழுது பாா்க்கும் வேலை செய்து வந்தாா். இவா், பொன்னேரி அருகே ஆலாடு கிராமத்தில் உள்ள மாமியாா் வீட்டுக்கு வந்துள்ளாா். கடந்த 19-ஆம் தேதி வெளியே சென்ற அவா் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், தமிழ்வாணன் ஆரணி ஆற்றின் அருகே செல்லும் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை சடலமாகக் கிடப்பதாக பொன்னேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று தமிழ்வாணனின் சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT