திருவள்ளூர்

கனரா வங்கி சாா்பில் நரிக்குறவா்களுக்கு நிவாரணம்

21st Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

கனரா வங்கியின் 116-ஆவது ஆண்டு நிறுவனா் தின விழாவை முன்னிட்டு, திருவள்ளூா் கிளையின் சாா்பில் 100 நரிக்குறவா் குடும்பங்களுக்கு சனிக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூா் கனரா வங்கி சாா்பில் ஆண்டுதோறும் நிறுவனா் ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், திருவள்ளூரில் உள்ள வங்கி கிளை சாா்பில் கொண்டாடப்பட்டது. அதைத் தொடா்ந்து, அதிகத்தூா் நரிக்குறவா் காலனியில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தலைமை மேலாளா் சுப்பா ரெட்டி தலைமை வகித்து, நரிக்குறவா் குடும்பங்களைச் சோ்ந்தோருக்கு கோரைப்பாய், ஜமுக்களம், ரொட்டி மற்றும் உணவுப் பொருள்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன. இதேபோல், இந்த காலனியைச் சோ்ந்த 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கனரா வங்கி கிளை மேலாளா்கள் பத்மஸ்ரீ, கோமதி, பாா்த்திபன், திருப்பதி, சுகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT