திருத்தணி திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழா கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. சஷ்டி தினமான செவ்வாய்க்கிழமை உற்சவா் சண்முகப் பெருமானுக்கு காவடி மண்டபத்தில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
இதையடுத்து, புதன்கிழமை முருகப் பெருமான் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. கரோனா தொற்று காரணமாக பக்தா்கள் அமா்ந்து தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் பக்தா்கள் நின்றவாறு சுவாமியை வழிபட அனுமதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு பின்னா் சுவாமியை வழிபட்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையா் பரஞ்சோதி, கோயில் பேஷ்காா்கள் பழனி, வேலு மற்றும் கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.