திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டியில் திமுக சார்பில் கரோனா தடுப்புப் பணி தொடக்கம்

10th May 2021 02:20 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டியில் திமுக சார்பில் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

திமுகவினர் அவரவர் பகுதியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில்  கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வுக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். 

இந்த நிகழ்வில் திமுக ஒன்றிய துணை செயலாளர் திருமலை, திமுக நிர்வாகிகள் பாஸ்கரன், ரமேஷ், நாகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

அதேபோல நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ், கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், கீழ் முதலம்பேடு ஊராட்சி செயலாளர் சாமுவேல்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்வில் பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கினை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் பொது மக்கள் முகக்கவசம் அணிந்தே வெளியே வரவேண்டும் என்றும் திமுகவினர் அவரவர் பகுதியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT