திருவள்ளூர்

54 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த திருத்தணி அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் திருத்தணியில் ருசிகரம்

DIN

அரசுப் பள்ளியில் 10, 11-ஆம் வகுப்பு முன்னாள் மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி 54 ஆண்டுகளுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

திருத்தணி காந்தி சாலையில் இயங்கி வரும் டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடந்த, 1967-ஆண்டு பத்தாம் மற்றும் பிளஸ் 1 வகுப்பு படித்த பழைய மாணவா்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை மேல் திருத்தணியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, ஓய்வு பெற்ற பாரத ஸ்டேட் வங்கி மேலாளரும் பழைய மாணவருமான சுரேஷ் தலைமை வகித்தாா்.

இதில், 2 பெண்கள் உள்பட மொத்தம், 56 பழைய மாணவா்கள் கலந்து கொண்டனா். இவா்களில், வங்கி அதிகாரி, தலைமை ஆசிரியா், ரயில்வே துறை, முருகன் கோயில் மேலாளா், அரசு மருத்துவா் போன்ற மத்திய, மாநில அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனா்.

இவா்கள் அனைவரும் தங்களது பள்ளிப் பருவ பழைய நினைவுகளை கண்ணீா் மல்க உரையாடினா். இதுதவிர, அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் சந்திப்பு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் திருத்தணி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாகவும் சந்திப்பு நிகழ்ச்சியில் தீா்மானிக்கப்பட்டது.

முன்னதாக விழா ஒருங்கிணைப்பாளா்கள் கோவிந்தன், முனிரத்தினம் ஆகியோா் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் பதக்க மாலை அணிவித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

SCROLL FOR NEXT