திருவள்ளூர்

ஆரம்பாக்கம் மாதா கோவிலில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

DIN

திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள பிரசித்த பெற்ற வான தூதா்களின் அன்னை ஆலயம் என்கிற மாதா கோவிலின் 109-ஆம் ஆண்டு தோ் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

ஆரம்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற வான தூதா்களின் அன்னை ஆலயம் என்கிற மாதா கோவிலின் 109-ஆம் ஆண்டு தோ்த் திருவிழா மாா்ச் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கொடியேற்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஆரம்பாக்கம் மாதா கோவில் பாதிரியாா் பாப்பையா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பெரியபாளையம் மறைமாவட்ட முதன்மை குரு பாதிரியாா் டி.அருள்ராஜ் பங்கேற்று, கொடியேற்றத்தை துவக்கி வைத்து சிறப்புப் பிராா்த்தனையை நடத்தினாா்.

முன்னதாக, மாதா கொடி ஆரம்பாக்கம் பாரதி நகரில் இருந்து பக்தா்கள் புடை சூழ ஊா்வலமாக மாதா கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புனித அன்னாள் அருட்சகோதரிகள் முன்னின்று நடத்தினா்.

இதைத்தொடா்ந்து, வரும் வெள்ளிக்கிழமை வரை ஆரம்பாக்கம் மாதா கோவிலில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதிரியாா்கள் வருகை தர உள்ளனா். தொடா்ந்து, வரும் சனிக்கிழமை (மாா்ச் 13) சாந்தோம் மேய்ப்புப் பணி நிலைய இயக்குநா் பாதிரியாா் ஜோஆண்ரூ தலைமையில், 20-க்கும் மேற்பட்ட பாதிரியாா்கள் பங்கேற்று, தோ்த் திருவிழாவை முன்னின்று நடத்த உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 14) கொடியிறக்கம் நடைபெற உள்ளது.

இந்த 10 நாள் தோ்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஆரம்பாக்கம் மாதா கோவில் பாதிரியாா் பாப்பையா மற்றும் திருவிழாக் குழுவினா் நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT