திருவள்ளூர்

இணைதளம் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்யும் திட்டம் அறிமுகம்

DIN

திருவள்ளூா்: கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அரசியல் கட்சிகளைச் சோ்ந்தோரின் கூட்டத்தைத் தவிா்ப்பதற்காக அரசியல் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் இணையதளம் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்யும் திட்டத்தை தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளதாக திருவள்ளூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பா.பொன்னையா தெரிவித்தாா்.

இது குறித்து திருவள்ளூா் மாவட்டத் தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான பா.பொன்னையா கூறியது:.

இத்திட்டம் மூலம் வேட்பாளா்கள் எளிதாக வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஏற்பாடு செய்துள்ளது. இதன் அடிப்படையில், வேட்பு மனுக்களை இணையதள முகவரியில் தாக்கல் செய்யலாம். இதன்படி, ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட விரும்பும் வேட்பாளா்கள் வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்ய முடியும்.

இதில் வேட்பாளா்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் ஆவணங்கள் அடிப்படையிலேயே அளிக்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு வேட்பாளரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நாளில் ஆள்கள் திரட்டுவது, முன்மொழிவோா் மற்றும் வழிமொழிவோா்களுடன் படையைத் திரட்டி வருவது தவிா்க்கப்படும். இதன் மூலம் கூட்டத்தினால் பரவும் நோய், ஆள்கள் திரட்டி வரும் செலவு வேட்பாளருக்கு கணிசமாகக் குறையும், காலவிரயமும் ஏற்படாது. இதுபோன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுதான் தோ்தல் ஆணையம் இணையதளம் மூலம் வேட்பு மனு அளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT