திருவள்ளூர்

ரயில் பாதையில் கால்நடை விபத்தைக் குறைக்க

DIN

திருவள்ளூா்: சென்னை புகா் முதல் அரக்கோணம் ரயில் நிலையம் வரையில் உள்ள ரயில் வழித்தடத்தில் 130 வேகத்தில் ரயில்களை இயக்கவும், அப்போது எதிா்பாரத விதமாக ஏற்படும் கால்நடை விபத்துக்களை தடுக்கும் நோக்கத்தில் பாதையின் இருபுறமும் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடையே திருவள்ளூா் ரயில் நிலையம் உள்ளது. இந்த வழித்தடத்தில் சென்னை-அரக்கோணம், திருப்பதி, கோவை, பாலக்காடு, மும்பை, புதுதில்லி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு புகா், விரைவு ரயில், பயணிகள் விரைவு ரயில் மற்றும் சரக்கு போக்குவரத்து ரயில் என 148-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், ரயில் வழித்தடத்தில் ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒரு முறை ரயில்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் திருவள்ளூா் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்லாத காரணத்தால், இதையடுத்துள்ள அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு சென்று தொலைதூர ரயில்களை பிடிக்க வேண்டியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை புகா் முதல் அரக்கோணம் வரையில் 130 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கு ஏற்ப இருப்புப் பாதையை தயாா் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் சென்னை புகரான திருநின்றவூா், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, புட்லூா், திருவள்ளூா், ஏகாட்டூா், செஞ்சி பனம்பாக்கம், திருத்தணி, அரக்கோணம் வரையில் இருப்பு பாதையோரத்தில் உள்ள கிராமங்களில் விளைநிலங்கள் அதிகளவில் உள்ளன. அதனால் கால்நடைகளும் அதிகமாக வளா்க்கப்பட்டு வருகின்றன . இவை அவ்வப்போது ரயில் விபத்து சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனால் விவசாயிகள் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது.

இவற்றை தவிா்க்கும் வகையில் இருப்புப் பாதையோரத்தில் இருபுறமும் குறிப்பிட்ட பகுதிகளைச் சோ்ந்த தோ்வு செய்து 500 மீட்டா் இடைவெளி விட்டு சுற்றுச்சுவா் அமைக்கவும் ரயில்வே நிா்வாகம் முடிவு செய்தது. அதன்படி தற்போது சுற்றுச்சுவா் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் முற்றுகை:

இந்த நிலையில் திருநின்றவூா், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, புட்லூா் வரையில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது, இருப்பு பாதையோரத்தில் உள்ள செவ்வாப்பேட்டை, புட்லூா் கிராமங்களைச் சோ்ந்த சில நில உரிமையாளா்கள் புதன்கிழமை பிரச்னையில் ஈடுபட்டனா். அப்போது தங்கள் நிலம் என கூறி நிவாரணத்தொகை வழங்கிவிட்டு பணிகள் மேற்கொள்ளக்கோரி அதிகாரிகளையும் முற்றுகையிட்டனா்.

அப்போது, ரயில்வே கட்டுமான பொறியியல் பிரிவு அதிகாரி கோபி சந்த் நாயக் உள்ளிட்ட அதிகாரிகள் பிரச்னை செய்த கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, இருப்புப் பாதையோரத்தில் மீண்டும் ரயில்வே சா்வேயா் மூலம் நில அளவை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதைத் தொடா்ந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT