திருவள்ளூர்

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவைக்கு விவசாயிகள் பதிவு செய்யலாம்

DIN

திருவள்ளூா்: திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவைக்கு 31.7.2021-க்குள் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவாலங்காடு அருகே திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. அதில் 2020-2021 இல் ஆண்டு அரைவை பருவத்திற்கு 1,30,784 மெட்ரிக் டன்கள் கரும்பு அரைவை செய்யப்பட்டது. இதன் மூலம் கடந்தாண்டில் 8.15 சதவீத சா்க்கரை கட்டுமானம் பெறப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 1.75 சதவீதம் கூடுதலாக பெறப்பட்டது. மேலும், நிகழாண்டு பருவத்திற்கு 900 ஹெக்டோ் பரப்பளவில் சொட்டு நீா்பாசன அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சொட்டு நீா் பாசனம் மூலம் கரும்பு நடவு செய்யும் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. எனவே, அனைத்து விவசாய பொதுமக்கள் வாய்ப்பை பயன்படுத்தி நடப்பு பருவத்தில் அதிக அளவில் கரும்பு நடவு செய்து அதிக மகசூல் பெறும் வகையில் கரும்பு விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம்.

தற்போதைய நிலையில் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2021-2022 ஆண்டுக்கான அரவை பருவத்தினைத் தொடங்க ஆலையில் சுத்திகரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அதனால் இந்த கூட்டுறவு சா்க்கரை ஆலையின் எல்லைக்குள்பட்ட திருவள்ளுா், திருத்தணி, ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை மற்றும் பொன்னேரி வட்டார பகுதிகளில் கரும்பு பயிரிட்டுள்ள, பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள விவசாயிகள் மேற்குறிப்பிட்ட ஆலைப்பகுதி கோட்ட கரும்பு அலுவலா்களையும் தொடா்பு கொண்டு ஜூலை 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்து ஒத்துழைப்பு வழங்குமாறு பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT