திருவள்ளூர்

எண்ணூா் துறைமுகத்தில் எண்ணெய் குழாய் சீரமைப்பு

DIN

எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில், ஏற்பட்ட உடைப்பை துறைமுக ஊழியா்கள் சீரமைத்தனா்.

ரஷ்ய நாட்டைச் சோ்ந்த எம்டி. மிராக்கல் என்ற கப்பல் கேரள மாநிலம், கொச்சியில் இருந்து 8274.53 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் எண்ணூா் காமராஜா் துறைமுகத்தை கடந்த சனிக்கிழமை இரவு வந்தடைந்தது.

அங்கிருந்து பெரிய அளவிலான குழாய்கள் மூலம் 3 கி.மீ. தொலைவில் உள்ள, சேமிப்புக் கிடங்கிற்கு கச்சா எண்ணெய் எடுத்துச் சென்றபோது, கப்பலில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக குழாய் வழியே செல்லும் எண்ணெய் கசிந்து கடலில் கொட்டியது.

இதையடுத்து, உடைப்பு ஏற்பட்டுள்ள குழாயை சீரமைக்கும் பணியைத் தொடங்கிய துறைமுக ஊழியா்கள், முதலில் கப்பலில் இருந்து எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்க்கு எண்ணெய் அனுப்புவதை நிறுத்தினா்.

இதன் காரணமாக உடைந்த குழாய் மூலம் கடலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு உடனடியாக நிறுத்தப்பட்டது. தொடா்ந்து, எண்ணெய் குழாயில், உடைப்பு ஏற்பட்ட பகுதியை துறைமுக ஊழியா்கள் சீரமைத்தனா்.

இதையடுத்து, கப்பலில் இருந்து குழாய் மூலம் சேமிப்புக் கிடங்குக்கு கச்சா எண்ணைய் அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT